ரம்ஜான் பண்டிகை முடியும் வரை பெரிய ஜவுளி கடைகளை திறக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருச்சி: ரம்ஜான் பண்டிகை முடியும் வரை பெரிய அளவிலான ஜவுளி கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து குடிமக்கள் மன்றத்தின் தலைவர் எம்.சேகரன், தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது வழக்கம். தற்போது, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், 3,000 சதுரடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், சிறு கடைகளில் அதிக அளவில் கூட்டமாக நின்று ஆடைகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, ரம்ஜான் பண்டிகை முடியும் வரை 3,000 சதுரடி பரப்பளவுக்கு மேல் உள்ள ஜவுளி கடைகளை திறந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை முழுமையாக கடைபிடித்து வியாபாரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்