கோவையில் 25-ம் தேதி நடக்க இருந்த - ராணுவப் பணிக்கான நுழைவுத் தேர்வு ஒத்தி வைப்பு :

By செய்திப்பிரிவு

கோவையில் வரும் 25-ம் தேதி நடக்க இருந்த, ராணுவப் பணிக்கான பொது நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தினால் கடந்த ஜனவரி மாதம், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய 11 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களுக்கு ராணுவப் பணியில் உள்ள சோல்ஜர் டெக்னீஷியன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் கிளர்க், அலுவலக காப்பாளர், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மேன் வகையிலான பணியிடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக வரும் 25-ம் தேதி நடக்க இருந்த பொது நுழைவுத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக ஆள்சேர்ப்பு இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்காக முன்னரே வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டும் ரத்து செய்யப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். புதிய தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திலோ அல்லது இந்திய ராணுவத்துக்கான www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

வலைஞர் பக்கம்

5 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்