திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளுடன் சுப நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட கேட்டரிங் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

கேட்டரிங் தொழிலுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 125 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனை நம்பி சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது தவிர, திருமண மண்டப உரிமையாளர்கள், மேடை அலங்கார நிபுணர்கள், வாழை இலை மற்றும் பூ விற்பனையாளர்கள், வாடகை வாகன ஓட்டிகள் என இந்த தொழிலை மட்டும் நம்பி தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் உள்ளனர். கோவையில் மட்டும் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நம்பி இருக்கின்றனர். இந்நிலையில், திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கரோனா பரவலைக் காரணம் காட்டி அரசு தடைவிதித்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் எப்படி கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறதோ அதே போன்று திருமண மண்டபங்களிலும் கட்டுப்பாடுகளுடன் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்