கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி :

By செய்திப்பிரிவு

ஈரோடு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, நேற்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொடிவேரி அணை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பவானிசாகரில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக திறக்கப்படும் நீர், கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, கொடிவேரி பாசனக் கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. கொடிவேரி அணையில் இருந்து வழிந்தோடும் உபரி நீர் பவானி ஆற்றில் செல்கிறது.

கொடிவேரி அணையில் நீர் வழிந்தோடும் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அணையில் தேங்கிய நீரில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றனர். கொடிவேரி அணை மற்றும் கால்வாய் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடந்ததால், மார்ச் 22-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பாிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடைவிதித்தனர்.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் நிறைவுற்றதால், நேற்று முதல் கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கவும், பாிசல் பயணம் மேற்கொள்ளவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசு நேற்று பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலா பயணிகள் கொடிவேரியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்