திருச்சி மாவட்டத்தில் - ஒரே நாளில் 91 பேருக்கு கரோனா : ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் 91 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 823 ஆக இருந்த நிலையில், புதிதாக 91 பேருக்கு நேற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58 பேர் குணமடைந்து, நேற்று வீடுகளுக்கு திரும்பினர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 855 ஆக உள்ளது. கரோனா பரவல் தொடங்கியதிலிருந்து திருச்சி மாவட்டத்தில் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறையினருடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

10 mins ago

வணிகம்

22 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்