1,271 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மா.அரவிந்த் கூறியதாவது:

வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி யில்லை. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே வாக்காளர்கள் தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். பார்வையற்ற வாக்காளர்கள் தங்களது உதவிக்கு ஒரு நபரை மட்டும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லலாம். வாக்காளர்களை தவிர தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகுந்த அனுமதி சீட்டு இல்லாமல் வேறு யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 137 மண்டல குழுக்கள் வாக்குச் சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 54 பறக்கும்படை குழுக் கள், 54 நிலையான கண் காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் 1,271 வாக்குச்சாவடிகளில் இணைய வழியில் இந்திய தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் வெப் கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை பின்பற்றி வாக் களிக்க வேண்டும் என்றார் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

32 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்