ஈரோட்டில் அரசு அலுவலர்கள் 6,975 பேர் இதுவரை தபால் வாக்குப் பதிவு :

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 6,975 பேர் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 145 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தபால் வாக்களிக்காமல் இருந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி பயிற்சி மையத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டி ருந்த வாக்குப்பெட்டியில் அவர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர். நேற்று நடந்த மூன்றாவது கட்ட பயிற்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என 3375 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 145 பேரில் 6975 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தபால் வாக்குப்பதிவுக்கான, படிவங்களை பெற்றுள்ளனர். இவர்கள் தனித்தனியாக தபால் மூலம் வாக்கு பதிவை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்