வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் - அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு :

By செய்திப்பிரிவு

வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,049 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, 2, 3 என வாக்குச்சாவடியில் தலா 4 அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதன்படி 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் மொத்தம் 9,832 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்கள் எந்த வாக்குச்சாவடி யில் பணியில் ஈடுபட உள்ளனர் என்பதை முடிவு செய்வ தற்காக கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிநேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம்(தனி) தொகுதியில் 46 நுண்பார்வையாளர்கள், சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 54 நுண்பார்வையாளர்கள், நாமக்கல்தொகுதியில் 10 நுண்பார்வை யாளர்கள், பரமத்தி வேலூர்தொகுதியில் 44 நுண்பார்வையாளர் கள், திருச்செங்கோடு தொகுதியில் 33 நுண்பார்வையாளர்கள், குமாரபாளையம் தொகுதியில் 28 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 215 நுண்பார்வையாளர் கள் வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை பணியாளர்கள், தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு செய்யும் பணி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தலைமை வகித்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் மொத்த முள்ள 4,280 வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிறைந்தவையாக 238 வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பணிபுரிய 10 சதவீதம் காப்பு அலுவலர்களுடன் மொத்தம் 18,832 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் I, 2, 3 மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு 20 சதவீதம் காப்பு அலுவலர்களுடன் 289 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான பணி ஆணை தேர்தல் பணி அலுவலர்களுக்கு நாளை (இன்று) நடைபெறும் பயிற்சி முகாமில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்