பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப் பதிவு :

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அவர் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக வாக்கு சேகரித்து வருகிறார்.

வேட்பாளர்கள் பிரச்சாரம் செல்லும் முன் தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த 2-ம் தேதி ஆற்காடு சாலையில் உள்ள மசூதி ஒன்றின் அருகே தேர்தல் நடத்தை விதியை மீறி குஷ்பு, பிரச்சாரம் செய்துள்ளார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக குஷ்பு மீது தேர்தல் பறக்கும் படையினர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்படி, தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் நடத்தை விதிகளைப் பொருத்தவரை மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. 100 மீட்டர் தொலைவில் நின்றே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

இதை மீறி குஷ்பு மசூதி அருகே சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்