திமுக கூட்டணியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 2006 தேர்த லில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் வென்றார். அதே போல் 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியிலும் அவரே வென்றார். அதன்பிறகு 2016-ல் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட குணசேகரன் 15,114 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். 3 முறை நின்று 2 முறை வென்ற இந் திய கம்யூனிஸ்ட், இந்த முறையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்டது. அதையேற்றுக் கொண்ட திமுக, சிவகங்கை தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி யுள்ளது. இங்கு மீண்டும் குணசேகரனே போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago