ஈரோடு, நாமக்கல்லில் எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு / நாமக்கல்: சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் 23 எஸ்.ஐ.க்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 42 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, அந்தியூர், கோபி, ஈரோடு ஆயுதப்படை, ஈரோடு அரசு மருத்துவமனை காவல்நிலையம், சூரம்பட்டி, கருங்கல்பாளையம், ஈரோடு தாலுகா காவல்நிலைய எஸ்.ஐ.க்கள் கோவை மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்துறை, சென்னிமலை, காஞ்சிகோவில், வெள்ளோடு, அறச்சலூர், பவானி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எஸ்.ஐ.க்கள் திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 23 எஸ்.ஐ.க்கள் முதல்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட இடமாற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய 10 ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட மொத்தம் 42 போலீஸ் எஸ்.ஐ.க்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சேலத்தில் இருந்து 27 பேர் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து15 பேர் என மொத்தம் 42 எஸ்.ஐ.க்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

மேலும்