6-வது கட்டமாக பாம்பன் ரயில் பாலத்தில் கர்டர்கள் மாற்றும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

1914-ம் ஆண்டில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டது. தற்போது 107ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலை கொண்டுள்ளது. இப்பாலத்தை அகலப்பாதையாக மாற்றிய பிறகு முதல் கட்டமாக 2015-ல் 28 கர்டர்களை மாற்றி அமைக்கும் பணியும், 2-ம் கட்டமாக 2016-ல் 16 கர்டர்களும், மூன்றாம் கட்டமாக 2017-ல் 32 கர்டர்களும், நான்காம் கட்டமாக 2018-ல் 27 கர்டர்களும், 2019-ல் 27 கர்டர்களையும் மாற்றும் பணி நடைபெற்றது. தற்போது ஆறாம் கட்டமாக 5 புதிய கர்டர்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. 13.30 மீட்டர் நீளம், 2.35 மீட்டர் அகலம், 1.25 மீட்டர் உயரம் கொண்ட 8 டன் எடையுள்ள ஒவ்வொரு கர்டரும், தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட பின் 11 டன் எடை கொண்டதாக மாறும்.

இந்த கர்டர்களை ஒன்றன் பின் ஒன்றாக வடிவமைத்து ரயில் தண்டவாளங்களில் வைத்தே இழுத்துச் செல்லப்பட்டு கேன்ட்ரி என்று சொல்லக் கூடிய கிரேன் உதவியுடன் பொருத்தப்படுகிறது. இந்த 5 கர்டர்கள் பொருத்தும் பணி இரண்டு வாரத்தில் முடிவடைந்து விடும். இதனால் ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்களின் நேரம் எதுவும் மாற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்