மேட்டூர் அருகே காற்றுடன் கனமழையால் வாழை மரங்கள் சேதம்

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மேட்டூர் அடுத்த கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத் தில் பல இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கெங்கவல்லி, சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக, கெங்கவல்லியில் 45 மிமீ மழையும், சங்ககிரி யில் 39 மிமீ, மேட்டூரில் 26 மிமீ மழை பதிவானது. மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தது.

இதனிடையே மேட்டூர் அடுத்த கொளத்தூர் வட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், அப்குதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை யளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வீரகனூர் 12, தம்மம்பட்டி 5, கரியகோயில் 4, வாழப்பாடி 2.70, எடப்பாடி 11.40, ஆத்தூர் 9.20, சேலம் 1.40, பெத்த நாயக்கன் பாளையம் 5.00 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்