தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், பொன்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது டீ கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்தூள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை தரமாக உள்ளதா? பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

அப்போது, காலாவதியான 12 லிட்டர் குளிர்பானம், உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

57 mins ago

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்