மதுரை செல்லூர், திருப்பரங்குன்றத்தில் கபடி வீரர்கள், மயில் சிலைகள் திறப்பு

By செய்திப்பிரிவு

மதுரை திருப்பரங்குன்றம் ரவு ண்டானாவில் மயில் சிலை, செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை திறந்து வைக்கப்பட்டது.

மதுரையில் உள்ள முக்கிய ரவுண்டானாக்களில் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சாரம் அடையாளப்படுத்தப்படுகிறது. பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் மீனாட்சி அம்மன் கோயில் தேர், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சியைப் போற்றும் வகையில் பழங்காநத்தம் ரவுண் டானாவில் பத்துத் தூண்கள், ஆரப்பாளையம் ரவுண்டானாவில் ஜல்லிகட்டுக் காளை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.10 லட்சத் தில் மயில் சிலை, செல்லூர் ரவுண்டானாவில் ரூ.19 லட்சத்தில் கபடி வீரர்கள் சிலை அமைக்கப் பட்டுள்ளன. இச்சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சிலைகளைத் திறந்து வைத்துப் பேசியதாவது:

மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூரில் கபடி வீரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பூங்காக்கள் எப்போதும் அழகாக இருப்பதற்காக ஆழ் துளை கிணறு அமைத்து நிரந் தரமாகத் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் கூடைப்பந்து, வாலிபால், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கபடி வீரர் களைப் போற்றும் வகையில் செல்லூரில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

14 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

22 mins ago

ஓடிடி களம்

54 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்