ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 5.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல் விடுபட்டவர்களுக்கு வீடு, வீடாக வழங்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 5.70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.

இளம்பிள்ளை வாதம் என்றபோலியோ நோயை கட்டுப்படுத்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 3.51 லட்சம்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப் பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த இடையம்பட்டி அம்மா மினி கிளினிக் மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச் சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத் தார். பின்னர், அவர் பேசும்போது, "5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்துஇலவசமாக வழங்கப்பட்டு வரு கிறது.

இந்தியாவில் இத்திட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் போலியோ கட்டுப்படுத் தப்பட்ட நாடாக இந்தியா திகழ் கிறது. வெளிநாடுகளில் போலியோ நோய் தென்பாட்டாலும் இந்தியா வில் இது போன்ற நோய் தாக்கம் இல்லை என்பதே மத்திய, மாநில அரசுகளின் சாதனையாக உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 83 குழந்தைகளுக்கு 700 முகாம்களில் போலியோ மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 2,294 பணியாளர்கள், தன்னார்வலர்கள், 88 மேற்பார்வை குழுவினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்பி டாக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையா ளர் ராமஜெயம், வட்டார மருத்துவ அலுவலர்கள் மலர்விழி, பசுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார். இதில், வாணியம்பாடி அரசு மருத்துவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பென்ட் லெண்ட் அரசு மருத்துவமனை, ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசும்போது, "வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க899 முகாம்கள் அமைக்கப்பட்டுள் ளன. 1 லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 3,555 பணியாளர்களும், பணிகளை மேற்பார்வையிட 110 மேற்பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது, பக்க விளைவுகள் இல்லாதது என்பதால், பெற்றோர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் சங்கரன், தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், நகர் நல அலுவலர் சித்ரசேனா, இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் மாறன், துணைத்தலைவர் வெங்கடசுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங் கும் முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 42 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 792 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் 2,795 பணியாளர்கள், 79 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, பொது மக்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும். ஏற் கெனவே எத்தனை முறை சொட்டு மருந்தை போட்டியிருந்தாலும், இந்த முறையும் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 2,19,952 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக 2,031 முகாம்கள் அமைக்கப்பட்டன. போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் பணியில் 7,814 பேர் ஈடுபட்டனர்.

ஆரணி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சுகாதாரத் துறை துணை இயக்கு நர்கள் அஜிதா, சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போலியோ சொட்டு மருந்துபோட்டுக்கொள்ளாத குழந்தை களுக்காக வீடு, வீடாக சென்று சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடிபணியாளர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்