வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூரில் வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி பேசியது: 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு உழவர் ஆர்வலர் குழுக்களும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை உள்ளடக்கிய உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2020-21-ம் நிதி ஆண்டில் வேளாண்மைத் துறை மூலம் 23 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் என மொத்தம் 38 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உழவர் ஆர்வலர் குழுக்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இணைந்து கூட்டாக வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்து, கூட்டு சாகுபடி மேற்கொள்வதாலும், கூட்டாக சந்தைப்படுத்துவதாலும் விளைபொருட்களின் உற்பத்தி செலவு குறைந்து கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்றார். வேளாண்மை துறை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய, மாநில அரசு திட்டங்கள்) பாபு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேல்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்