கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டா, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவ னர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் பயிரிடப்படும் சம்பா நெற்பயிர் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட எந்த பாதிப்புக் கும் உள்ளாகாமல் சாகுபடி செய்யப் படுவது வழக்கம்.

ஆனால், இப்போது பெய்து வரும்மழையால் இந்த மாவட்டங்களில் பயிரி டப்பட்டுள்ள அனைத்து வகையான பயிர்களும் மிகக்கடுமையாக பாதிப்பு களுக்கு உள்ளாகியுள்ளன. முதலில் ‘நிவர்’ புயல், அடுத்து ‘புரெவி’ புயல், அதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் மழை, இப்போது ஜனவரி மத்தியில் மழை என ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து 4 கட்டங்களாக பெய்த மழைக்கு எந்தப் பயிரும் தப்பவில்லை.

நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரையிலும், நிலக்கடலை பயிரிட்டிருந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இப்போதைய மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பள வில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் நிதியுதவிஅறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடைசி இரு கட்ட மழை களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. காவிரி பாசன மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள விவசாயி கள் அனைவரும் தங்கள் வீட்டுப்பெண்களின் நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு சங்கங்களிலும், தனியாரிடமிருந்தும் அதிக அளவில் கடன் வாங்கித் தான் விவசாயம் செய்துள்ளனர். பயிர்கள் சேதமடைந்ததால் ஏற்பட்ட இழப் புகளைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இழப்புகள் ஈடு செய்யப்படாவிட்டால் அவர்கள் நடுத்தெருவுக்கு வரு வதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே, இந்த சூழலை உணர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்