மார்பக புற்றுநோய் கண்டறியும் மாமோகிராம் பேருந்து அறிமுகம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி காவேரி மருத்துவமனை, ரோட்டரி சங்கம், ஷோபிகா இம்பெக்ஸ் ஆகியவை சார்பில் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எஸ். மணிவண்ணன், கவுரவ விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் பி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு இலவச பரிசோதனை நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதை ஊர்க்காவல் படை தளபதி ஆர்.ராஜா ஒருங்கிணைத்தார். மேலும், காவேரி மருத்துவமனை இயக்குநர் ஆர்.அன்புச்செழியன், துறைத் தலைவர் வி.செந்தில்வேல் முருகன், திட்டத் தலைவர் ராஜகோபாலன், மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, உதவி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தப் பேருந்து, மார்பக புற்றுநோய் கண்டறியும் மாமோகிராம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பாப்ஸ்மியர், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை கண்டறியும் வசதிகளை கொண்ட தென்னிந்தியாவின் முதல் பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

56 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

18 mins ago

மேலும்