காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலா தலம் வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் காவல் துறையினர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நீர் நிலைகள், சுற்றுலா தலங்களுக்குச் செல்ல, தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தடைகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு நீர்நிலை பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும். அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இப்போது செய்யப்பட்டு வருகின்றன.

சுற்றுலா தலங்களுக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அவர்கள் குடும்பத்தினரை தவிர வேறு நபர்கள் அருகில் கூட்டமாக நிற்கக் கூடாது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவற்றை போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போலீஸார் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராதத்தை கட்டாதவர்கள் மீது வழக்குப்திவு செய்யப்படும். மேலும், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்