ரூ.60 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளியில் கூட்டுறவு கடன் சங் கத்தில் திருப்பத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளை விக்கப்படும் பருத்தியை விவசாயிகள் நேரிடையாக கொண்டு வந்து ஏலத்தில் விடுகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் பருத்தி ரகங்கள் தரமானதாக இருப்பதால் கோவை, அவினாசி, திருப்பூர், பெங்களூரு, சூரத் மற்றும் பல இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்பாலைகளுக்கு பருத்தியை ஏலத்தில் நேரிடையாக கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சில வாரங்களாக பெறப்பட்ட 1,300 பருத்தி மூட்டைகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருப்பு வைக்கப்பட்டு நேற்று மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். இதில் டிசிஎச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,800-க்கும், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் 6,400-க்கும் நேற்று ஏலம் போனது. இதனால், பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலத்தில் சங்க செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் சாமிக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

வலைஞர் பக்கம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்