கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தியான ரூ.55.36 லட்சத்துக்கு கிருமிநாசினி விற்பனை

By செய்திப்பிரிவு

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதங்களில் ரூ.55.36 லட்சம் மதிப்பில் கிருமிநாசினி விற்பனை செய்யப்பட்டுள்ளது, என ஆலை அதிகாரி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை மட்டுமின்றி கிருமிநாசினியும் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆலையில் கிருமிநாசினி உற்பத்தி செய்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலையின் மேலாண் இயக்குநர் விஜய்பாபு கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது. இதை ஆலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தனி யூனிட் உள்ளது. தலைமைச் செயலகம் முதல் பல்வேறு அரசு அலுவலங்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

ஆலையின் முதுநிலை ரசாயனர் சுப்ரமணி கூறுகையில், கிருமிநாசினி உற்பத்தி செய்ய தமிழகத்தில் இரு கூட்டுறவு ஆலைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இதில் ஒன்று சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. மற்றொன்று உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை.

இங்கு கடந்த ஏப்ரல் மதல் நம்பர் மாதம் வரை 19 ஆயிரத்து 500 லிட்டர் கிருமி நாசினி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், 15 ஆயிரத்து 639 லிட்டர் கிருமிநாசினி அரசு அலுவலகம், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.354 என மொத்தம் ரூ.55 லட்சத்து 36 ஆயிரத்து 383 மதிப்பில் கிருமிநாசினி விற்பனை செய்யப்பட்டுள்ளது, என்றார்.

படம் உள்ளது.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள கிருமிநாசினி யூனிட்டில் பாட்டில்களில் கிருமிநாசினி நிரப்பப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்