ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

By செய்திப்பிரிவு

ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 900 ரொக்கம் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது பணியில் இருந்த இணை சார் பதிவாளர் நேரு மற்றும் சார் பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் வைத்திருந்த இணை சார் பதிவாளர் நேரு மற்றும் சார் பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

13 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

18 mins ago

விளையாட்டு

39 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்