சாலை மறியலில் ஈடுபட்ட 565 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 565 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப் பட்டணம்,பர்கூர், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, சூளகிரி, சிங்காரப்பேட்டை, கல்லாவி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் சத்யா உட்பட 350 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரியில் வழக்கு

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நான்கு ரோடு, காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று முன்தினம் திமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாவட்டம் முழுக்க மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினர் 215 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

8 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்