வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது தமிழக அரசை கண்டித்து முழக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெற்றி வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங் களில் தடையை மீறி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டதாக 1,016-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக பாஜக சார்பில் வெற்றி வேல் யாத்திரை திருத்தணியில் நேற்று தொடங்கி வரும் டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாக இருந்தது. இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், திருத்தணியில் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வெற்றி வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்து, பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, பாஸ்கர், காந்த், மாவட்ட துணைத் தலைவர் ஜெகன், மாவட்டச் செயலாளர் ஏழுமலை, வணிகப் பிரிவு மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ண குமாரி, மகளிரணி மாவட்ட பொதுச் செயலாளர் சுகுணா சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்டத் தலைவர் விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பொறுப் பாளர் ரவிச்சந்திரன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் பாபாஸ் பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாச்சலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ், மாநில மகளிரணி துணை தலைவி பிரேமா மாலதி, மாநில மகளிரணி செயலாளர் கிருஷ்ணசாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவல் துறையினரின் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 150-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜக மாவட்டத் தலைவர் வாசுதேவன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, முருகப் பெரு மானின் ஆயுதமான ‘வேல்’ கையில் ஏந்தியபடி ‘‘வெற்றிவேல், வீரவேல்’’ என முழக்கமிட்டு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட பாஜக பார்வை யாளர் வெங்கடேசன், திருப்பத்தூர் நகரத் தலைவர் அருள்மொழி, மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கண்ணன், ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் துணை காவல் கண் காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 50-க்கும் மேற் பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பிறகு, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக 356 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். அப்போது அவர்கள், ‘வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், வேல் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி’ முழக்கமிட்டனர்.

இதேபோல், ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையிலும், வந்தவாசியில் நகரத் தலைவர் சத்திய நாரா யணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 310 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1,016-க்கும் மேற் பட்ட பாஜகவினர் கைது செய் யப்பட்டு தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்