உலக பட்டினி குறியீடு வெளியீடு 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 116 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 101-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 94-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் (92), வங்கதேசம் (76), நேபாளம் (76), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன.சீனா, பிரேசில், குவைத் உட்பட 18 நாடுகள் இதில் சிறப்பான இடங்களை பிடித்திருக்கின்றன. கரோனா தொற்றின் தாக்கம், வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளே இப்பட்டியலில் இந்தியா பின்தங்க காரணமாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

35 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்