பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் - விசாரணை ஆணையம் அமைத்து மே.வங்க முதல்வர் மம்தா உத்தரவு :

By செய்திப்பிரிவு

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப் பின் பெகாசஸ் உளவு மென் பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர் கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தை நாடா ளுமன்றத்தில் எழுப்பும் எதிர்க் கட்சிகள், நீதிமன்றத்தின் கண் காணிப்பில் சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது:

எனது செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது. சில சமயங்களில் ஒடிசா, டெல்லி முதல்வர்களுடன் என்னால் பேச முடிவது இல்லை. மேற்கு வங்கத்தில் ஏராளமானோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மத்திய அரசு அமைதியாக உள்ளது.

எனவே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்குர், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்படும். இந்த ஆணையம் செல்போன்களில் ஹேக்கிங் செய்வது உட்பட பல விஷயங்களை விசாரிக்கும் இந்த ஆணையம் விரைவாக விசாரணையைத் தொடங்கும். இவ்வாறு மம்தா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்