கரோனா விதிகளை மீறி கூட்டு பிரார்த்தனை பாதிரியார்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் :

By செய்திப்பிரிவு

 காகுளம்: கரோனா நிபந்தனைகளின்படி எந்த ஒரு மத பிரச்சாரங்களோ, உற்சவங்களோ, கூட்டுப் பிரார்த்தனைகளோ நடத்தக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில், ஆந்திராவின் காகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் 2 பாதிரியார்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை ஒன்று சேர்த்து, மேடை அமைத்து, ஒலிப்பெருக்கிகள் அமைத்து கூட்டுப் பிரார்த்தனையை நடத்தினர். இதனை அறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் கூட்டத்தை நிறுத்துமாறு எச்சரித்தனர்.

இதனை கண்டுகொள்ளாத பாதிரியார்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, கரோனா நிபந்தனைகளை மீறி நடத்தப்படும் இக்கூட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து மக்கள் இங்கேயே இருந்தால் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீஸார் அறிவித்தனர். இதையடுத்து, கூட்டம் ரத்தாகி மக்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்