மாவட்ட அளவில் தடுப்பூசி விவரம் வெளியிட மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அப்படியானால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினசரி எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்ற விவரத்தை வெளியிட வேண்டும். டெல்லியில் 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதைவிட மோசமான நிலைமை தெலங்கானா மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசியே அனுப்பப்படவில்லை.

ஆனால் டெல்லியிலும், தெலங்கானாவிலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி வருகிறார். பொய்யான தகவல்களைத் தந்து திசை திருப்பி வருகிறார் மத்திய அமைச்சர்.

ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்