2 மாதங்களுக்கு இலவச ரேஷன் - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் : டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நெருக்கடியை மக்கள் கடந்து வருவதற்கு உதவியாக டெல்லியில் உள்ள 72 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், ஆட்டோ டாக்சி டிரைவர்களுக்கு தலாரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவால் மேலும் கூறும்போது,“டெல்லியில் நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்குவதால் பொது முடக்கமும் 2 மாதங்கள் நீடிக்கும் என்று அர்த்தமில்லை. டெல்லியில் நிலைமை மேம்படும், பொதுமுடக்கத்துக்கு தேவையிருக்காது என நம்புகிறேன்.

டெல்லியில் கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, 1.56 லட்சம் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்கியது. அதுபோல் இந்த ஆண்டும் உதவி செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

45 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்