திரிணமூலுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் 8 பேர் நீக்கம் :

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டமாக தேர்தல் நடக்்கிறது. கொல்கத்தாவில் உள்ள சவ்ரங்கி, என்டலி, பொவெய்பூர், பெலியாகடா, ஜொராசன்கோ, ஷியாம்புகுர், காஷிபூர்-பெல்கசியா மற்றும் கொல்கத்தா துறைமுகம் ஆகிய தொகுதிகளில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்த தொகுதிகளின் 8 தேர்தல் அதிகாரிகளும் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கொல்கத்தா துறைமுகம் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதியும் மற்ற 7 தொகுதிகளுக்கு 29-ம் தேதியும் தேர்தல்கள் நடக்க உள்ளன.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஸ் அப்தாப் கூறுகையில், ‘‘ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான நடவடிக்கைதான்’’ என்று தெரிவித்தார். எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக புகார்கள் வந்தன என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

27 mins ago

சுற்றுச்சூழல்

37 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

53 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்