18 மணி நேரத்தில் 25.54 கி.மீ. சாலை ஹைதராபாத் நிறுவனம் சாதனை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாதைச் சேர்ந்த ஐஜேஎம் இந்தியா கட்டுமான நிறுவனம் 18 மணி நேரத்தில் 25.54 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்து புதிய சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இந்நிறுவனத்தை மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

சோலாப்பூர்-பீஜப்பூர் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிப் பாதையாகும். இதில் ஒரு வழித்தடம் 25.54 கி.மீ தூரமாகும். இத்தூர சாலையை 18 மணி நேரத்தில் அமைத்துள்ளது ஐஜேஎம் நிறுவனம். இது மலேசியாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இந்த பணியில் மொத்தம் 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிக விரைவாக பணியை முடித்து சாதனை புரிந்த நிறுவன பணியாளர்கள், இத்திட்டப் பணி இயக்குநர், அதிகாரிகள் ஆகியோரைப் பாராட்டுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தப் பணியை முடிப்பதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் வெங்கடேஸ்வர் ராவ் தெரிவித்தார். 18 மணி நேரத்தில் 18.70 கி.மீ. தூர சாலையை அமைத்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது தனது பணியாளர்கள் முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 110 கி.மீ. தூர சோலாபூர்- விஜாபூர் நெடுஞ்சாலை பணி இந்த ஆண்டு அக்டோபரில் முடிவடையும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் ஒரு வழித் தடத்தை மட்டும் தனித்தனியாக போடும் நடைமுறை 2018-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்