இந்திய எல்லை தவறாக சித்தரிப்புஉலக சுகாதார அமைப்பு விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வரைபடத்தில் இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரித்துள்ளதாக மத்திய அரசு அளித்த புகாரை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்கம் வெளியிட்டுள்ளதாக நேற்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் இந்தியாவின் வரைபடத்தை தவறாக சித்தரித்துள்ள விவகாரம், அந்த அமைப்பிடம் உயர்மட்ட அளவில் கொண்டு செல்லப்பட்டு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அந்த அமைப்பு அளித்துள்ள பதிலில், தங்கள் இணையதளத்தில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தனது மறுப்பில், ‘இத்தகைய வரைபடங்களை எந்தவொரு நாட்டு எல்லையின் சட்டப்பூர்வ நிலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தாக கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

25 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்