லடாக்கின் லே மலைப்பகுதியில்வானிலை ஆய்வு மையம் திறப்பு

By செய்திப்பிரிவு

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் புதிய வானிலை ஆய்வு மையத்தை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் லே நகர் அமைந்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே உயரமான பகுதியில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையம் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது.

லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே இருந்தாலும், சமவெளி, குளிர் பாலைவனம், மலைப்பகுதி மற்றும் வறட்சி பகுதி என பல்வேறு பருவநிலைகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த மையம் இப்பகுதியின் தட்பவெப்பநிலையை கண்காணித்து உள்ளூர் மக்களுக்கு அவ்வப்போது வானிலை முன்னறிவிப்பை வெளியிடும். குறிப்பாக, நெடுஞ்சாலைகளின் வாகன நெரிசல், விவசாயிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான முன்னறிவிப்பை இந்த மையம் வெளியிடும் என லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்