வேளாண் சட்டங்களை திரும்பப் பெற பிரியங்கா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியின் எல்லைப் பகுதிநெடுஞ்சாலைகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டம்அரசியல் சதி என சிலர் கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி குறை கூறுவது பாவம். விவசாயிகளுக்கு அரசு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்