கரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது இதுவரை 95.5 லட்சம் பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதில் 95.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 25,152பேருக்கு கரோனா தொற்று ஏற் பட்டது. அவர்களையும் சேர்த்துஇதுவரை 1 கோடியே 4,599 பேர்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 95,50,712 பேர்குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,08,751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 347 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. எனினும் இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை95.465 பேர் குணமடைந்துள்ளனர். 3.09 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் புதிதாக 1,960 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அங்கு 61,471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 1,222 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய் யப்பட்டது. அந்த மாநிலத்தில் 15,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 458 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 4,377 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கேரளாவில் நேற்று 6,293 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 60,396 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் 1,418 பேர், உத்தர பிரதேசத்தில் 1,407 பேர், மேற்குவங்கத்தில் 2,239 பேர், ஒடிசாவில் 358 பேர், ராஜஸ்தானில் 1,076 பேர், தெலங்கானாவில் 627 பேர், சத்தீஸ்கரில் 1,413 பேர், ஹரியாணாவில் 641 பேர், குஜராத்தில் 1,075 பேர், மத்திய பிரதேசத்தில் 1,181 பேர், அசாமில் 102 பேர், பஞ்சாபில் 439 பேர், காஷ்மீரில் 388 பேர், ஜார்க்கண்டில் 274 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்