ரயில் மறியல் போராட்டத்தால் ரூ.1,670 கோடி நஷ்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தொடர்போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்தஒன்றரை மாதமாக தொடர்ந்துவருகிறது. இதன் காரணமாகபஞ்சாபில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளிடம் அரசும் ரயில்வே துறையும் பல முறைகோரிக்கைகள் வைத்தும் ரயில்சேவைகளை தொடங்குவதற்கான உத்தரவாதத்தை அவர்கள் அளிக்கவில்லை. பெரும்பாலும் ரயில் தண்டவாளங்களில் போராட்டங்களில் ஈடுபடுவதை நிறுத்தி இருந்தாலும் சில பகுதிகளில் போராட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ரயில்வே துறைக்கு ஒரு நாளைக்கு ரூ.36 கோடி இழப்பு ஏற்படுகிறது. சுமார் 3,090 சரக்குரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுஇருப்பதன் மூலம் துறைக்கு ரூ.1,670 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரி வித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்