எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தங்கள் எல்லையை விரிவுபடுத்த முயற்சிக்கும் சக்திகள் அத்து மீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாளில்ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவர்களும் உற்சாகம் அடைகின்றனர்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகை நாளான நேற்று முன்தினம் ராஜஸ்தான் எல்லையில் உள்ள லாஞ்சிவாலா ராணுவ முகாமுக்கு சென்றிருந்தார். அங்கு பணிபுரியும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டின் மீது யாரேனும் கழுகு பார்வையை செலுத்தினால், அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்போது நம் நாடு உலகின் பெரிய நாடுகளுடன் போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்கு பிற நாடுகளுடன் கைகோர்த்துள்ளோம். தீவிரவாத முகாம்கள் எங்கிருந்தாலும், அவற்றின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் திறன் நமது ராணுவத்துக்கு உள்ளது என்பதை வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

குறிப்பாக, தீவிரவாதத்துக்கு துணை நிற்பவர்களின் இடத்துக்கே (பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான துல்லிய தாக்குதல்) சென்று தாக்குதல் நடத்தி உள்ளோம்.

மேலும் தங்கள் எல்லையை விரிவுபடுத்த சில சக்திகள் (சீனா) முயன்று வருகின்றன. இதனால்உலக நாடுகளுக்கு அவை தொல்லை கொடுத்து வருகின்றன.எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்பது 18-ம் நூற்றாண்டின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் நாட்டு நலனில் நாம் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்பது உலக நாடுகளுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 19971-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதில் ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ளலாஞ்சிவாலா பகுதியில், ஏராளமான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அப்போது நமது தரப்பில் குறைவான வீரர்களே இருந்தபோதிலும், பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சியை முறியடித்தனர். இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி லாஞ்சிவாலா பகுதியில் வீரர்களை சந்தித்து உரையாடினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்