அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு - 'பிஎம்-போஜன்' என்ற பெயரில் மதிய உணவு : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘பிஎம்-போஜன்' என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிஎம்-போஜன் என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. தற்போது பள்ளிகளில் நடை முறையில் இருக்கும் தேசிய மதிய உணவு திட்டத்துக்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 30,795 கோடி செலவிடப்படும். இத்திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஒருவேளை சூடான உணவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிஎம்-போஜன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிஎம்-போஜன் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர்.

2021-22 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான 5 வருட காலத்துக்கு இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.54,061 கோடியே 73 லட்சம் செலவிடும். இது தவிர உணவு தானியத்துக்கான கூடுதல் செலவாக ரூ.45 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்கும்.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.31,733 கோடியே 17 லட்சம் செலவு ஏற்படும். எனவே, இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட் ரூ.1 லட்சத்து 30,794 கோடியே 90 லட்சமாக இருக்கும்.

அரசு மற்றும் அரசு தொடக்கப் பள்ளி களில் இயங்கும் மழலையர் வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் தற்போது இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த வகுப்புகளுக்கும் இத்திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும். பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் ஏற்படுத்தவும் அரசு ஊக்குவிக்கும்.

இவ்வாறு மத்திய அரசின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்