பனாரஸ் இந்து பல்கலை.யில் பாரதியார் பெயரில் இருக்கை : பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பனாரஸ் இந்து பல்கலைக்கழ கத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தை யொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், "சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதி யாரின் 100-வது நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்து கிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித் தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவுகூர்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சர்வதேச பாரதி திருவிழாவில் பிரதமர் மோடி காணொலியில் பேசிய வீடியோ இணைப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் குஜராத் அகமதாபாத்தில் கட்டப்பட் டுள்ள சர்தார்தாம் பவனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசியதாவது:

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இதே நாளில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத் தப்பட்டது. இது வரலாற்றில் மறக்க முடியாத நாள். இதே நாளில் அமெரிக்காவின் சிகாகோவில் உலக மதங் கள் மாநாட்டில் சுவாமி விவே கானந்தர் பங்கேற்று இந்தியா வின் மனிதநேய பண்புகளைப் போதித்தார்.

அதேபோல் இன்று இந்தியா வின் மகாகவி, தத்துவ அறிஞர், சுதந்திர போராட்ட தலைவர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினம். சர்தார் வல்லபபாய் படேல் கண்ட ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தத்துவம் மகா கவி பாரதியாரின் தமிழ் எழுத்துகளில் முழு தெய்வீகத்துடன் ஜொலிக்கிறது. விவேகானந்த ரிடம் இருந்து அவர் ஊக்கம் பெற்றார். மனிதநேயம் மற்றும் ஒற்றுமைக்கு அவர் முக்கியத் துவம் அளித்தார். அவரது கொள்கைகளில் இந்தியாவின் சிந்தனை, தத்துவங்கள் வெளிப் பட்டன. காசியில் பாரதியார் வாழ்ந்தபோது, தனது சிந்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களையும், சக்தியையும் அளித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இதில் இந் தியர்கள் அனைவரும் கர்வம் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்