9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க லாமா என்பது குறித்து ஆலோ சித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி யில் ‘உயிர்கோள அடர்வனம்’ திறப்பு விழா நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் 1000-வது மரக் கன்றை அங்கு நட்டுவைத்தார். பின்னர் திருவள்ளூவர் சிலை மற்றும் அப்துல்கலாம் படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் பள்ளியில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறை மற்றும் கல்வி 40 செயலியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோ சித்து வருகிறோம். பிற மாநிலங் களில் உள்ள நிலவரம் பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய முடிவு எடுக்கப்படும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்களும் தைரியமாக முன்வர வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டரீதியான முன்னெடுப்பு களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்க வைக்க பள்ளியின் உட்கட்ட மைப்பை வலுப்படுத்துவது குறித்து மாவட்டந்தோறும் ஆலோசலனை நடத்துவது டன், முதன்மை கல்வி அதிகாரி களின் கருத்துகளையும் கேட் டுள்ளோம். மேலும் ஆசிரி யர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்ட மிட்டுள்ளோம்.

அரசுப்பள்ளி நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய் தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் 75 சத வீதத்துக்கும் மேலாக கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது முதல்கட்டமாக எச்சரிக்கை செய்கிறோம். தொடர்ந்து வசூலித்தால் தொடர்புடைய பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால் ஒரே முறையை பின்பற்றுவது குறித்து விரை வில் முடிவெடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை, டிஎன்பிஎஸ்சி உடன் இணைப் பது குறித்து எந்த ஆலோசனை யும் மேற்கொள்ளப்பட வில்லை. கரோனா பரவல் கட்டுக்குள் வந்தபின் தேர்வு அறிவிப்புகளை டிஆர்பி வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமு வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்