நாடுமுழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு - ஒரே மாதிரியான மதிப்பெண் கணக்கீட்டுமுறை சாத்தியமில்லை : உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

அனைத்து மாநிலங்களுக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரி யான மதிப்பெண் கணக்கீட்டு முறை சாத்தியமில்லாத ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘கரோனா பரவல் காரணமாக 21 மாநி லங்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு களை ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் ஏற்கெனவே தேர்வுகளை நடத்தியுள்ளன. தற்போது ஆந்திராவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளதால் மாநில வழிக்கல்வி வாரி யம் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை ஒரே மாதிரியாக கணக்கிட பொதுவான திட்டத்தை உரு வாக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘‘ஒவ்வொரு மாநிலவழிக் கல்வி முறை யும் வெவ்வேறு மதிப்பெண் முறைகளை கொண்டுள்ளன. எவ்வாறு மதிப்பெண் அளிப்பது என்பதை சம்பந்தப்பட்ட மாநி லங்கள்தான் முடிவு செய்ய முடியும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் கணக்கீட்டு முறை என்பது சாத்தியமில்லாத ஒன்று. மாநில வழிக்கல்வி வாரியங்கள் 12-ம் வகுப்புக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் கணக்கீட்டை 10 நாட்களுக்குள் வகுத்து, முடிவுகளை ஜூலை 31-க்குள் வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

ஆந்திர அரசுதான் பொறுப்பு

ஆந்திராவில் ஜூலை இறுதி வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 ஆயிரம் அறைகளில் தேர்வுகளை நடத்தும்போது அதற்கான திட்டம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘அதிக மான கூட்டம் கூட்டப்பட்டால் தேர்வுகளை ரத்து செய்ய நேரிடும். கரோனா தொற்று காரணமாக ஒரு மாணவர் உயிரிழக்க நேரிட்டாலும் அதற்கு ஆந்திர அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு ஏதாவது ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப் பீடு வழங்க உத்தரவிடுவோம். இது தொடர்பான திட்டம் மற்றும் வழிமுறை களை உச்ச நீதிமன்றத்தில் இன்று விரிவாக விளக்க வேண்டும்’’ என ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்