ஊரடங்கால் வேலை இழந்தவர் 70 பேருக்கு வேலை தந்தார் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஆடை உற்பத்தி நிறு வனத்தைத் தொடங்கி இருக்கிறார் ரஞ்சன் சாஹு.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது இளைஞர் ரஞ்சன் சாஹு, கொல்கத்தா வில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் கரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நிறுவனம் மூடப்பட்டதால் ரஞ்சன் வேலை இழந்தார். இதையடுத்து, ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமமான குந்திக்கு வந்தார். அவரைப் போலவே பலரும் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பி இருந்தார்கள். அவர்களின் வாழ் வாதாரமே கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில், வேலை இழந்த இளை ஞர்களை ஒன்று திரட்டி சொந்தமாக ஆடை உற்பத்தி நிறுவனத்தை அமைக்க ரஞ்சன் முடிவு செய்தார். அவரது கிராமத் திலும் அருகில் உள்ள கிராமத்திலும் வேலை இழந்து ஊர் திரும்பிய புலம்பெயர் இளைஞர்கள் 70 பேரை வைத்து, சொந்தமாக நிறுவனத்தை தொடங்கினார். 3 ஆயிரம் சதுர அடியில் 45 தையல் இயந்திரங்களுடன் கடந்த ஜனவரியில் இருந்து நிறுவனம் செயல் பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண் டிருந்த ரஞ்சன், குடும்ப சூழல் காரண மாக படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். வேலை போய்விட்டதே என்று துவண்டுவிடாமல் தனது விடா முயற்சி யால் இன்று 70 பேருக்கு சம்பளம் கொடுக் கும் அளவுக்கு ரஞ்சன் உயர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘வேலை போனதால் சொந்த ஊருக்குத் திரும்பி என்ன செய்வதென்றே தெரி யாமல் இருந்தேன். சேமிப்பு கொஞ்சம் கைவசம் இருந்ததால் சில காலம் செலவு களை சமாளிக்க முடிந்தது. ஆனால், சேமிப்பு இல்லாதவர்கள் என்ன செய்வார் கள் என்று நினைத்தேன். இப்படியே எவ்வளவு காலம் இருக்க முடியும் என்று மனதுக்குள் கேள்வி எழுந்தது.

இதனால், தெரிந்த வேலையைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்கலாம் என எடுத்த முயற்சிதான் இந்த ராயல் கிரீன் கார் மென்ட் கம்பெனி. கேரளா, சூரத் போன்ற பகுதிகளில் ஆடை தயாரிப்பு வேலையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர் களை ஒன்றிணைத்து இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்