திடீர் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - நடிகர் விவேக் உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

நடிகர் விவேக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு எக்மோ கருவி பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சின்னக் கலைவாணர் என திரையுலகி னரால் அழைக்கப்படுபவர் பிரபல நகைச் சுவை நடிகர் விவேக் (வயது 59). இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த் ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப் பது தெரியவந்தது.

இதையடுத்து, அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க ‘எக்மோ’ கருவியை பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று மாலை மருத்துவமனைக்கு சென்று விவேக்கின் உடல்நிலை பற்றியும், அவ ருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித் தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் சிம்ஸ் மருத்துவமனை துணைத் தலைவர் ராஜூ சிவசாமி கூறியதாவது:

சுயநினைவிழந்த நிலையில் நடிகர் விவேக் பகல் 11 மணிக்கு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத் துவ பரிசோதனையில் அவரது இதயத்தின் இடதுபுற ரத்த நாளத்தில் 100 சதவீத அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்து ‘ஸ்டென்ட்’ கருவி பொருத்தப்பட்டது.

அதன்பின்னரே விவேக்கின் இதயத் துடிப்பு ஓரளவு சீரானது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரது இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், நுரையீரலை செயற்கையாக இயக்க வைக்க உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளது. 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட தகவல்களை வெளி யிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரை வில் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரை வில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாரடைப்பு காரணமாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக், விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த் திக்கிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந் தேன். அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய நகைச் சுவையால் மக்களை மகிழ்விக்கும் ‘சின் னக் கலைவாணர்’ நடிகர் விவேக் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூக சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் விவேக், விரைவில் குணமடைய வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: கரோனா தடுப்பூசி மீதான பொதுமக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற் காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்: நண்பர் விவேக் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் விவேக் நலம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்