புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி : துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்புக்கான சிறப்பு அவசர ஊர்தி சேவையை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உமிழ்நீர் பரிசோதனை தற் போது செய்யப்படுவதில்லை. ஆர்டி-பிசிஆர், ரேபிட் பரி சோதனை செய்கிறோம். தொற்று பரவல் அதிகம் ஏற்பட சாத்தியமுள்ள ‘ஹாட் ஸ்பாட்’டில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து வசதியுள்ள அவசர ஊர்தி சேவையைத் தொடங்கியுள்ளோம்.

புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் ஒரு மாதத்துக்குள் கரோனா தடுப்பூசி போட திட்ட மிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம். முக் கிய மருத்துவமனைகள் அனைத்திலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்களோடு அதிகம் தொடர்புடைய ஓட்டல் தொழி லாளர்கள், ஆட்டோ, டெம்போ மற்றும் பேருந்து ஓட்டுநர் களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தப் படும். ஓட்டல் தொழிலாளர் களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கிறது.

ஊரடங்குக்கு வாய்ப்பில்லை

இந்தியாவில் 11 மாநிலங் கள் கரோனா பரவலில் அபாயகரமான கட்டத்தில் உள்ளன. அதில், புதுச்சேரி மாநிலம் இல்லை.

அதனால் இங்கு ஊரடங் குக்கு தற்போது அவசியம் இல்லை. அந்த நிலைக்கு தள்ளிவிடாமல் மக்கள் எச் சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஆளுநர் மாளிகை செய்தித் தொடர் பாளர் குமரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஜிப்மர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அனை வருக்கும் கரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்