கூட்டுறவு சங்க பயிர் கடன் ரத்துக்கான ரசீது 15 நாளில் வழங்கப்படும் அரக்கோணத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாளில் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வந்த முதல்வருக்கு மாவட்டச் செயலாளரும் அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சு.ரவி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.வி.சாரதி,சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.எல்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அரக்கோணம் அடுத்த கைனூ ரில் மகளிர் குழுவினர் மத்தியில் முதல்வர் நேற்று பேசியதாவது:

முதல்வர் பழனிசாமி என்ன செய்துவிட்டார் என தினசரி நாளி தழ்களில் விளம்பரம் செய்கிறார் என மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள் ளத்தான் விளம்பரம் கொடுக் கிறோம். ஸ்டாலின் கூட்டத்தில் வைத்த பெட்டியில் மனுக்களை போட்டு 'சீல்' வைக்கிறார்கள். நீங்கள் எப்போது முதல்வராவது, அந்த பெட்டியை உடைப்பது. நாட்டில் என்ன நடக்கிறது என்றே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தமிழகம் முழுவதும் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் இதுவரை 9.77 லட்சம் மனுக்களை வாங்கி இருக்கிறோம். இதில், 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. வருவாய் கிராமங்கள் அளவில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ரசீது கொடுக் கப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் கொடுக்கின்ற ரசீது செல்லாது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 41 சதவீதம் மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் இன்று 435 பேர் மருத்துவம் படிக்கின்றனர்.

16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயி கள் குடும்பங்களுக்கு நன்மை செய்த அரசு இந்த அரசு. விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல் வர் பேசியதாவது: சிறுபான்மை மக்களை அரண்போல் காக்கும் அரசாகவும் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாகவும் இருப் பது தமிழகம்தான். இஸ்லாமியர் களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க ஆண்டு தோறும் 5 ஆயிரம் டன் அரிசி கொடுக்கப்படுகிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா வுக்கு இலவசமாக சந்தனம் வழங் கப்பட்டது. ஹஜ் பயணத்துக்கான மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள் ளது. புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக சென்னையில் ரூ.15 கோடியில் கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.

கடந்த பொங்கலுக்கு ரூ.1,000, கரோனா காலத்தில் ரூ.1,000, இந்தாண்டு தை பொங்கலுக்கு ரூ.2,500 என கடந்த ஆண்டு தைப் பொங்கல் முதல் இந்தாண்டு தைப் பொங்கல் வரை ரூ.4,500 வழங்கப்பட்டுள்ளது. அதிக விருது பெற்ற மாநிலம் தமிழகம்தான். வளர்ச்சிப்பாதையில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு பேசினார்.

வாரியார் பிறந்தநாள் இனி அரசு விழா

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்றிரவு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

28 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்