அதிகரிக்கும் அரசுப் பள்ளி சேர்க்கையைத் தக்கவைக்கவும்! : மேல்நடுத்தட்டைக் கீழ்நடுத்தட்டு வர்க்கமாகவும், கீழ்நடுத்தட்டை வறுமைக்கோட்டுக்குள்ளும், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை இன்னும் இழிந்த நிலைக்கும் அழுத்தித் தள்ளியிருக்கிறது கரோனா பேரிடர்க் காலம். விளைவாக, தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன? ஆசிரியர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள், அரசு என்ன செய்யப்போகிறது? கல்வியாளர்களின் கருத்து என்ன? உரையாடலாம்...

By கே.கே.மகேஷ்

ரா.தாமோதரன், அரசுப் பள்ளி ஆசிரியர்:

பெற்றோருக்குக் கட்டண நெருக்கடியும், மாணவர்களுக்கு மன அழுத்தமும் தராத பள்ளி அரசுப் பள்ளி. தரமிக்க, ஐசிடி தனித்திறன் கொண்ட ஆசிரியர்களைக் கொண்டது அரசுப் பள்ளி. ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் எந்தக் கட்டணமும் இல்லாமல் 12-ம் வகுப்பு வரையில் தொடர்ந்து படிக்க முடியும். பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, சைக்கிள், லேப்டாப் உட்பட 14 வகையான விலையில்லாப் பொருட்களை மாணவர்கள் பெற முடியும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் கூடுதலாக மாணவர்கள் சேர வேண்டும் என்றால், தனியார் பள்ளிகளைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தங்களுடைய சிறப்பம்சங்கள் அடங்கிய பதாகையைப் பள்ளி முன்பு வைக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் இருக்கின்றன என்றாலும், அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. இதுபோன்ற குறைகளையும் அரசு போக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

53 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்