ஐசிசி டி 20 உலகக் கோப்பை - தென் ஆப்பிரிக்காவை போராடி வீழ்த்தியது ஆஸி. :

By செய்திப்பிரிவு

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதல்ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப் பிரிக்காவை வீழ்த்தியது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்பேட் செய்த தென் ஆப்பிரிக்காவை 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள். தென்ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். காகிசோரபாடா 19, டேவிட் மில்லர் 16, ஹெயின்ரிச் கிளாசன் 13, கேப்டன்தெம்பா பவுமா 12 ரன்கள் சேர்த்தனர். குயிண்டன் டி காக் 7, ராசி வான் டெர் டசன் 2, டுவைன் பிரிட்டோரியஸ் 1 ரன்களில் நடையை கட்டினர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 119 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலியா 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. ஆரோன் பின்ச் 0, டேவிட் வார்னர் 14, மிட்செல் மார்ஷ் 11, ஸ்டீவ் ஸ்மித் 35, கிளென் மேக்ஸ்வெல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள்தேவையாக இருந்த நிலையில் மார்கஸ் ஸ்டாயினிஸ் பொறுப்புடன் விளையாடினார். அன்ரிச் நார்ட்ஜே வீசிய 19 ஓவரில் ஸ்டாயினிஸ் பவுண்டரி அடிக்க 10 ரன்கள் கிடைத்தது. பிரிட்டோரியஸ் வீசியகடைசி ஓவரில் ஸ்டாயினிஸ் 2 பவுண்டரிகள் விளாச ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டாயினிஸ் 24, மேத்யூவேட் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஹசல்வுட் தேர்வானார்.

இன்று இந்தியா - பாகிஸ்தான்

இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள்கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டுஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மோதியிருந்தன. இதுவரை டி 20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 5 முறை நேருக்கு நேர் மோதியுள் ளன. இதில் ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றிபெறவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

இலங்கை - வங்கதேசம்

நேரம்: பிற்பகல் 3.30

இடம்: ஷார்ஜா

இந்தியா - பாகிஸ்தான்

நேரம்: இரவு 7.30

இடம்: துபாய்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்