தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய : அனல்மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 8,580 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசனாகும். இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து தினமும் 8 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் முடிந்துவிட்டதால், காற்றாலைகளில் இருந்து இம்மாதம் முதல் தேதியன்று 18 லட்சம் யூனிட்கள், 2-ம் தேதி 12 லட்சம் யூனிட்கள் என குறைந்தஅளவில்தான் மின்சாரம் கிடைத்துள்ளது. வரும் நாட்களில் காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மேலும் குறையக் கூடும். எனினும்,தேவையைப் பூர்த்தி செய்ய அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்