பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற - பாலபாரதிக்கு முதல்வர் வாழ்த்து :

By செய்திப்பிரிவு

பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரைஉள்ளிட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. சிறார் இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் யெஸ்.பாலபாரதி எழுதிய 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற சிறார் இலக்கிய நூலுக்கு 2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஸ்டாலின்: ‘மரப் பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அவர் மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங் களைத் தொடட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: 2020-ம் ஆண்டில், தமிழில் சிறந்த சிறார் இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது,யெஸ்.பாலபாரதி எழுதியுள்ள `மரப்பாச்சி சொன்ன ரகசியம்’எனும் நூலுக்கு வழங்கப்பட்டுள் ளது. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் விருதுக்கு தகுதியானதாகும்.

தமுஎகச அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பாலபாரதி, ஊடகவியலாளராகவும் திகழ்ந்து வருகிறார். அவருடைய படைப்புத் திறன் மென்மேலும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்